பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் பிறந்தநாள் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள அரசம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிலிண்டர்களுக்கு கேஸ் நிரப்பும் ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருந்து வேலைபார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் அங்கு பணிபுரிந்துவரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரவீந்திரா என்பவருக்கு பிறந்தநாள் என்பதால் அனைவரும் மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு முற்றியதில் பூபேந்திரா என்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.