கன்னியாகுமரியில், சாஸ்தா கோயில் நிலத்தில் உள்ள ரப்பர் மரங்களை வெட்டி கடத்துவது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குமாரபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், பெருஞ்சிலம்பு சாஸ்தா கோயில் நிர்வாகியாக உள்ளார். கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் ரப்பர் தோட்டத்தில் உள்ள ரப்பர் மரங்களை அந்த பகுதியை சேர்ந்த மாற்று மதத்தை சேர்ந்த வினோ என்பவர், ரவுடிகள் துணையோடு வெட்டி கடத்தியுள்ளார்.
மேலும், சாஸ்தா கோயிலை சாத்தான் கோயில் என்று அவர் கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்டால் வினோ கொலை மிரட்டல் விடுப்பதாக ராஜேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.