தஞ்சை கீழராஜ வீதியில் மாநகராட்சியின் விதிகளை மீறி கட்டப்பட்ட ஜவுளிக்கடையின் கட்டடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கீழ வீதி பகுதியில் பிரபல ரெடிமேட் நிறுவனமான நடராஜா ஸ்டோர் இயங்கி வருகிறது. இந்த கடையை கட்ட 2 ஆயிரம் சதுர அடிக்கு அனுமதி வாங்கிவிட்டு, 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கட்டடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதனை இடிக்க நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 72 மணி நேரத்தில் கட்டடத்தை இடித்து அகற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கூடுதல் உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து, விதிகளை மீறி கட்டப்பட்ட ஜவுளிக்கடையை
பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.