சேலம் அருகே மதமாற்றும் கும்பலை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் எச்சரித்து அனுப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி அருகே உள்ள பெருமாபாளையத்தில் 7 பேர் கொண்ட கும்பல் வீடுகள் தோறும் மதமாற்றம் செய்யும் வகையிலான துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தன.
இதனை அறிந்த சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் முருகன் தலைமையிலான நிர்வாகிகள் அங்கு சென்ற நிலையில், பாஜகவினரைக் கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் வந்த காரை வழிமறித்து பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த கும்பலை பொதுமக்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.