ஒரு குடும்பம் வாழ, திமுக நடத்தும் மொழி நாடக அரசியலுக்கு எத்தனை காலம் தான் ஏமாறப் போகிறதோ இந்த தமிழகம்? என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திமுகவில் தன் மகன் உதயநிதியின் வளர்ச்சிக்காக சகோதரி “கனிமொழி”யை வெறுப்பதும்..!! தன் ஆட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காக இருமொழி ஆதரவு என்கிற பெயரில் “ஹிந்தி மொழி”யை எதிர்ப்பதும்..!!
இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் “உருது மொழி” யை ஆதரிப்பதும்..!! தலைநகர் சென்னையில் மாநகராட்சி பள்ளிகளில் சத்தமில்லாமல் “பிரெஞ்ச் மொழி” யை அனுமதிப்பதும்..!! அப்பப்பா!! ஒரு குடும்பம் மொழியை வைத்து அரசியல் நடத்த எத்தனை எத்தனை நாடகம்?
ஒரு குடும்பம் வாழ அவர்கள் நடத்தும் மொழி நாடக அரசியலுக்கு எத்தனை காலம் தான் ஏமாறப் போகிறதோ இந்த தமிழகம்?
திருப்பரங்குன்றம் முத்தமிழ் முருகா..!! தமிழையும், தமிழகத்தையும் இந்த திராவிட மாடல் கும்பலிடம் இருந்து காப்பாற்று!! என எச். ராஜா வேண்டியுள்ளார்.