விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி மாதம் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து குமாரலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், 7 பேரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.