மும்மொழி கொள்கையில் தாய்மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மாணவர்களிடையே நிலவும் வேற்றுமையை களைந்து சமமான நிலையை உருவாக்க புதிய கல்விக்கொள்கை உதவும் என தெரிவித்தார். அனைத்து மொழிகளையும் தான் மதிப்பதாக தெரிவித்த தர்மேந்திர பிரதான் மும்மொழி கொள்கையில் தாய்மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக மாணவர்கள் பல மொழிகளை கற்பதில் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பினார். மும்மொழிக் கொள்கையில் ஹிந்தி உட்பட எந்த மொழியும் திணிக்கப்படுவதில்லை எனவும் உறுதிபட தெரிவித்தார்.