சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். நடை மேடையில் நடந்துசென்றபோது அவரை வழிமறித்த மர்ம நபர், கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்க நகையை பறித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பெண் காவலருக்கு அவர் பாலியல் தொல்லை அளித்த நிலையில், இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த சத்திய பாலு என்பது தெரியவந்த நிலையில், போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.