தருமபுரியில் நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம் அருகேயுள்ள பெரியதோட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முதியவர்களான பிரபுராஜ் – பத்மாவதி தம்பதியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
பத்மாவதி வழக்கம் போல வீட்டிற்குள் உறங்கச் சென்ற நிலையில், கணவர் பிரபுராஜ் வீட்டின் முன்புள்ள குடிசையில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், காலையில் பத்மாவதி வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து அதிச்சியடைந்த பிரபுராஜ் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து சடலத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான அறிவழகன் என்பவர், கடன் தொல்லையால் மூதாட்டியை அடித்து கொலை செய்து அவரது பணம் மற்றும் 6 சவரன் நகைகளை திருடிச் சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.