மத்திய அமைச்சர் எல்.முருகன் திருப்பரங்குன்றம் மலையில் ஏறிச்சென்று காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலையின் மேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல, திருப்பரங்குன்ற மலைக்கு வந்துள்ளார். ஆனால் மலையேற முதலில் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பின்பு எல்.முருகன் உள்பட 5 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கினர். இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை கூறி, காசி விஸ்வநாதர் கோயிலில் அவர் தரிசனம் செய்தார்.