தூத்துக்குடியில் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணியின் கரையோரத்தில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசித்திருவிழா, கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்நிலையில், 9வது நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளியதை தொடர்ந்து, ரத வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ”கோவிந்தா கோவிந்தா” என விண்ணதிர உற்சாக முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.