திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரப்பு செய்ய நினைக்கும் தீய சக்திகளின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோவில்களில் சுவாமி வழிபாடு மேற்கொண்டேன்.
தமிழ் மக்களின் முதற்கடவுளான முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரப்பு செய்ய நினைக்கும் தீய சக்திகளின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பல்லாண்டு காலங்களாக இந்து மக்கள் வழிபாடு செய்து வரக்கூடிய திருப்பரங்குன்றம் மலையை, வருவாய்த் துறை ஆவணங்களில் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தரப்பினர் ஆக்கிரமித்துக் கொள்ள முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
எனவே, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் மக்கள் தரிசிக்கின்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து அறநிலையத் துறையை எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.