திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை எந்த பராமரிப்பும் செய்யவில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தமிழ் ஜனத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில்
திருப்பரங்குன்றம் மலையில் எந்த பராமரிப்பும் இல்லை என்றும் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் எந்த பராமரிப்பும் செய்யப்படவில்லை என எல்.முருகன் குற்றம் சாட்டினார்.
மேலும் இங்கு பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் இந்து சமய அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் மலைப்பகுதி முழுவதும் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது என எல்.முருகன் குற்றம் சாட்டினார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் கோயில்களை நிர்வாகிக்க வேண்டுமென எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.