டெல்லி வந்தடைந்த கத்தார் மன்னர் TAMIM BIN HAMAD AL THANI -யை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
2 நாட்கள் அரசுமுறை பயணமாக, கத்தார் மன்னர் TAMIM BIN HAMAD AL THANI இந்தியா வருகை தந்துள்ளார். டெல்லி வந்தடைந்த அவருக்கு இந்திரா காந்தி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கத்தார் மன்னரை TAMIM-ஐ பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை கத்தார் மன்னர் TAMIM BIN HAMAD AL THANI சந்தித்தார். பின்னர் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.