ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், பாஜக எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தவரும், பாஜக எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா, கடந்த சில தினங்களுக்கு முன் பிரயாக்ராஜ் சென்றிருந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் நீராடிய அவர், ஊர் திரும்புவதற்காக பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் தனது மனைவியுடன் ஒரு சாதாரண பயணியைப் போல் அமர்ந்திருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் இருக்கை முன்னறிவிப்பின்றி மாற்றம் செய்யப்பட்டதற்கு, “ஒரு எம்.பி.க்கே இந்த நிலை என்று அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக எம்.பி., அர்ஜுன் முண்டா, பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக ரயிலுக்கு காத்திருந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.