சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் பிணை ஏதுமின்றி நூறு கோடி ரூபாய் வரை விடுவிப்பதற்கான பரஸ்பர கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் தொடங்கி வைத்தார்.
சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்காக நூறு கோடி ரூபாய் வரை பிணையில்லாமல் கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
அந்தத் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், முதற்கட்டமாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 11 பயனாளிகளுக்கு கடன் உதவிக்கான ஆவணத்தை அவர் வழங்கினார்.