உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா காரணமாக பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா வரும் 26ஆம் தேதி மகா சிவராத்திரியுடன் நிறைவடைகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாக கருதப்படும் கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
திரிவேணி சங்கமத்தில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் மகா கும்பமேளாவில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பிரயாக்ராஜ் ரயில் நிலையம், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.