கனடாவில் டெல்டா விமானம் தரையிறங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.
மின்னியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 76 பயணிகளுடன் கனடாவின் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு டெல்டா விமானம் புறப்பட்டது.
பியர்சன் விமான நிலையத்தில் கடும் பனிப்புயல் வீசிய நிலையில், விமானம் தரையிறங்கும்போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 18 பயணிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டொராண்டோ விமான நிலையம் சுமார் இரண்டு மணிநேரம் மூடப்பட்டது.