ஜெயலலிதா வாழ்க்கை பயணம் - லேடி ஜெ.ஜெ என தலைப்பிட்டு எழுத தொடங்கியுள்ளதாக காலச்சக்கரம் நரசிம்மா அறிவிப்பு!
Sep 11, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கை பயணம் – லேடி ஜெ.ஜெ என தலைப்பிட்டு எழுத தொடங்கியுள்ளதாக காலச்சக்கரம் நரசிம்மா அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2025, 10:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதையை எழுத தொடங்கியுள்ளதாக, அவரது நெருங்கிய நண்பர் காலச்சக்கரம் நரசிம்மா தெரிவித்துள்ளார்.

தி இந்து நாளிதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான காலச்சக்கரம் நரசிம்மா தமது முகநூல் பக்கத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அனைவரும் விரும்பும் தலைவராக திகழ வேண்டுமென்றால், அனைவரையும் அனைத்து நேரங்களிலும், ஏதாவது ஒரு வழியில் திருப்திப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், அதனால் எந்தவித சாதனைகளையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இப்போது அனைவராலும் வெறுக்கப்படுவது குறித்து தாம் கவலைப்படவில்லை என்று ஜெயலலிதா தம்மிடம் கூறியதாக பதிவிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அம்மா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என மக்கள் ஏங்குவார்கள், அதுதான் சரியான தருணம் என்றும், அப்போது தனது வாழ்க்கை சரிதையை எழுதத் தொடங்குகள் எனவும், நட்புரீதியான சந்திப்புகளில் கடைசி சந்திப்பின்போது ஜெயலலிதா தம்மிடம் கூறிய வார்த்தைகள் என்றும் காலச்சக்கரம் நரசிம்மா தெரிவித்திருக்கிறார்.

நேற்று முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதையை எழுத தொடங்கிவிட்டதாகவும்,  லேடி ஜெ ஜெ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தலைப்பை மறைந்த ஜெயலலிதா தேர்ந்தெடுத்ததாகவும் காலச்சக்கரம் நரசிம்மா குறிப்பிட்டுள்ளார்.

Tags: Late Chief Minister JayalalithaaKalachakram NarasimhaLady JJJayalalithaa life history
Share
Tweet
SendShare
Previous Post

தரையிறங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த விமானம் – டொராண்டோ விமான நிலையம் மூடல்!

Next Post

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வரவேண்டும் – இம்மானுவேல் மேக்ரான்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies