செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு கால்நடை மருத்துவமனையில் பணம் பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம் அரசு கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் 300 முதல் 500 ரூபாய் வரை சிகிச்சை அளிக்க லஞ்சம் பெறுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.
மேலும் இங்குள்ள மருந்துகளை அவர் எடுத்துச் சென்று வெளியில் விற்று பணம் பெறுவதாகவும் புகார் எழுந்தது. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.