புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என கூறப்பட்டுள்ளதா என்பதை ப.சிதம்பரம் நிரூபிக்க முடியுமா? என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற பா.ஜ.கவின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது, “மூன்றாவது மொழியாக வெளிநாட்டு மொழி உட்பட எந்த மொழியையும் தேர்வு செய்யலாம் என தெரிவித்தார்.
மூன்றாவது மொழிக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ஒரு ரூபாய் கூட தமிழக அரசு செலவு செய்ய தேவையில்லை என்றும், மத்திய அரசே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசிற்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பொய்யான விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திமுக வல்லமையான கட்சி என்றும், பலமுறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பொய் பேசலாமா? என்றும் அவரி வினவினார்.
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மஹேஷின் மகன் மூன்றாவது மொழி தேர்வு செய்யும்போது அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழி கற்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்றும் எஸ்.ஜி.சூர்யா வினவினார்.