ராமநாதபுரம் அருகே குடிசை தீயில் எரிந்து சேதமடைந்ததால், சாலையோரம் தனது தாயுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண், தனக்கு ஒரு தகர கொட்டகையாவது அமைத்து தருமாறு மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொல்லந்தோப்பை சேர்ந்தவர் நிலர்வேணி. மாற்றுத் திறனாளியான இவர், தனது தாயாருடன் குடிசையில் வசித்துவந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்நிலையில், மாற்று வீடு கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தவழ்ந்து தவழ்ந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் நிலர்வேணி மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு இருப்பதற்கு ஒரு தகரக் கொட்டகை வீடாவது அமைத்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.