டெல்லி ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் காவலர் பணியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு 24 மணி நேரமும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு பெண் ரயில்வே போலீசார் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் பணியாற்றி வரும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ரயில்வே துறை, கடமை மற்றும் தாய்மையின் உணர்வுடன் பணியாற்றும் பெண் காவலர், எண்ணற்ற தாய்மார்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.