தமிழக சட்டப்பேரவை மார்ச் 14-ஆம் தேதி கூடுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக சட்டப்பேரவை மார்ச் 14ம் தேதி கூட உள்ளதாக தெரிவித்தார். அன்றைய தினம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனறும், மார்ச் 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அப்பாவு தெரிவித்தார்.