கடலூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள குமாரபுரம் பகுதியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் பயிலும் மாணவியிடம் தமிழ் ஆசிரியர் ஞானபழனி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில், மாணவியிடம் தமிழ் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து நெல்லிக்குப்பம் போலீசார் தமிழ் ஆசிரியர் ஞானப்பழனியை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.