புதுக்கோட்டை அருகே செல்போன் உடைந்ததால் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தங்கை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் பகுதியில் வசித்து வரும் சித்திரைகுமார்- ஜீவிதா தம்பதிக்கு 18 வயதில் மணிகண்டன் மகனும், 16 வயதில் மகளும் உள்ளனர்.
அண்ணன் தங்கைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், தங்கையின் செல்போனை அண்ணன் உடைத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த தங்கை கிணற்றில் குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அண்ணன், தங்கையை காப்பாற்ற கிணற்றில் குதித்த நிலையில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.