காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 9-ம் தேதி மலைப்பட்டைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் என்பவரது வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் ராஜேஷை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு 8 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதில் படுகாயமடைந்த ராஜேஷ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பூந்தமல்லியில் பதுங்கியிருந்த 9 பேரை சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.