சங்ககிரியில் மந்தக்கதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் கீழ் ஓமலூர் – சங்ககிரி – திருச்செங்கோடு மார்க்கமாக 4 வழிச்சாலை விரிவாக்க பணி 2021ஆம் ஆண்டு தொடங்கியது. கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், ஓமலூர் முதல் சங்ககிரி ஐவேலி வரை நடைபெற்று வந்த சாலை விரிவாக்க பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, சங்ககிரி ஆர்கே நகர் ரயில்வே வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தப்படாததால் இதர பணிகளை தொடர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.