அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பொதுப் பாதையை அடைத்த ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
வில்லாநத்தம் கிராமத்தில் இருளர் சமூகத்தினர் உள்பட 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பயன்படுத்திவந்த பொதுப்பாதையை, ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ஒரு பெண் உட்பட 3 பேருக்கு காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.