கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சமூக வலைதளம் மூலம் சில இளைஞர்கள் அறிமுகமாகி உள்ளனர். நாளடைவில் அந்த பழக்கம் நட்பாக மாறிய நிலையில், அவர்கள் குனியமுத்தூரில் தாங்கள் வசிக்கும் அறைக்கு வருமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அங்கு சென்ற சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமி வீட்டிற்கு தாமதமாக சென்ற நிலையில், அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது அவர்களிடம் சிறுமி நடந்ததை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடந்த பெற்றோர் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 7 கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளனர்.