திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
பனப்பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ் தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு முன்பு நிறுத்தியுள்ளார். சிறிதுநேரம் கழித்து, இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்களை துரத்தியுள்ளார்.
தாராபுரம் அருகே சென்றபோது வாகனத்தை திருடிய இளைஞர்கள் விபத்தில் சிக்கி கீழே விழுந்தனர். ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொரு இளைஞரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.