ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில்,
புயலால் பாதிப்பிற்குள்ளான உட்கட்டமைப்புகளை
சீரமைக்க, 80 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களில் உள்ள 5 லட்சத்து 18 ஆயிரம் விவசாயிகளுக்கு, 498 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிவாரணத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒருசில நாட்களில் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.