உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் மனைவியை கொலை செய்த கணவர், தனது நான்கு வயது மகள் வரைந்த ஓவியத்தால் போலீஸில் சிக்கினார்.
ஜான்சியை சேர்ந்த சந்தீப், கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியை துன்புறுத்தியதுடன், அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்.
இதை முதலில் தற்கொலை என போலீசார் முடிவு செய்தனர். ஆனால் கொலையை நேரில் பார்த்த 4 வயது மகள், தனது தாயை தந்தைஅடித்துக்கொன்று தூக்கில் தொங்கவிட்டது போன்று ஓவியம் வரைந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து மனைவியை அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.