டெல்லியில் பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. நாளை மாலை முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லி புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவின் போது சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக ராம்லீலா மைதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 5,000க்கும் மேற்பட்ட போலீசார், 10க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை 4:30 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்வில் புதிய முதல்வரும் அமைச்சர்களும் பதவியேற்பார்கள். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்இ பாஜக தலைவர்கள், பாஜகஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.