அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.வி.சண்முகம், தேர்தல் ஆணையம் குமாஸ்தா வேலை மட்டுமே பார்க்க வேண்டும் என விமர்சித்தார்.
இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள புகழேந்தி, சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், இரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.