ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மிராக்கி குழுவின் சார்பில், கொல்கத்தாவில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு 400 செடிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னையில் சர்வதேச பசுமை வனத்தை உருவாக்கும் விதமாக, “ஸ்பிரெட் தி விங்” எனும் பெயரில் இந்தியா – நேபாளம் இடையே, 3 பெண்கள் காரில் பசுமை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மிராக்கி குழுவின் சார்பில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களான சிவபாலா தேவி, கோதங்கி சுசித்ரா, சரவண செல்வி ஆகியோர் 5 ஆம் நாள் பயணத்தில் கொல்கத்தா சென்றடைந்தனர்.
போவானிபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 400 செடிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உடன் இணைந்து பசுமை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கொல்கத்தா ரோட்டரி நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சர்வதேச ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் சேகர் மேத்தா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.