வேலூரில், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டது.
சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலீஸ் அக்கா திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் அக்கா பாதுகாப்பில் உள்ள காவலர்களின் தொடர்பு எண்ணை மாணவிகள், மாணவர்களும் நேரடியாக புகார் அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் அறிவிப்பு பலகை மற்றும் சுற்றுச்சுவரில் எழுதி வைக்க வேண்டுமென அறிவுறுத்தினார் .
இதன் மூலம் பெண் குழந்தைகள் நேரடியாக புகார்கள் அளிக்க முடியும், அவர்களும் பாதுகாப்பாக இருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தெரிவித்தார் .