புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக 5 மாணவிகள் உதவி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளித்தனர்.
தொடர்ந்து புகாரின் பேரில் உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பெருமாளை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பெருமாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.