திருப்பூரில் கணவன் கண் முன்னே மனைவியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவர், திருப்பூரில் வேலை தேடி அலைந்துள்ளனர். ரயில் நிலையம் அருகே காத்திருந்த அவர்களிடம் அறிமுகமான பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் 2 இளைஞர்கள், பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளனர்.
மேலும், அந்த தம்பதிக்கு தங்க இடம் இல்லாததை அறிந்த இளைஞர்கள், தங்களது அறையில் தங்க வைத்துள்ளனர். இரவில் அனைவரும் உறங்கிய பின் கணவரை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள், பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், பீகாரை சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் 2 இளைஞர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.