சத்ரபதி சிவாஜியின் வீரமும் தொலைநோக்கு பார்வையும் சுயராஜ்யத்திற்கு அடித்தளமிட்டதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தி நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். அவரது வீரமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைமைத்துவமும் சுயராஜ்யத்திற்கு அடித்தளமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரது தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகளை நிலைநிறுத்த தலைமுறைகளை ஊக்கப்படுத்தியதாகவும், வலுவான, தன்னம்பிக்கை மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதில் அவர் நம்மை ஊக்குவிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.