நடிகர் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் புது பொலிவுடன் வரும் ஏப்ரலில் ரீ- ரிலீஸாகிறது.
கடந்த 1995-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘பாட்ஷா படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் ‘பாட்ஷா’, கடந்த 2017-ம் ஆண்டு மீண்டும் டிஜிட்டலாக ரீஸ்டோர் செய்து வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா படம் 30 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து பேசினார்.
அந்த வகையில், பாட்ஷா படம் 4கே டிஜிட்டல் வடிவத்தில், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் புதுபொலிவு பெற்று வருவதாகவும் வருகிற ஏப்ரல் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.