திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அனுமதி மறுத்தது ஏன்? என டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையேற முயன்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ள அண்ணாமலை, மத்திய அமைச்சரை தடுத்து நிறுத்தினால் மாநிலத்தில் உள்ள சாமானியர்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முறையாக அனுமதி பெற்றிருந்த பின்பும் காவல்துறையினர் மத்திய அமைச்சரை தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, விரும்பும் இடத்தில் வழிபடும் உரிமையை பறிக்கும் வகையில் போலீசார் நடந்துகொண்டுள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.