கேரளாவின் மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது பட்டாசு வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அப்போது, மைதானத்தின் அருகே அமர்ந்திருந்த பார்வையாளர்களை நோக்கி பட்டாசுகள் பாய்ந்ததில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் கால்பந்து போட்டி நிறுத்தப்பட்டது.