ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் செல்ஃபி எடுக்க வேண்டுமென அழுத சிறுமியை சமாதானப்படுத்தி செல்ஃபி எடுத்த ஜெகன் மோகன் ரெட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது.
விஜயவாடா மத்திய சிறைச்சாலையில் உள்ள கட்சி தொண்டரை சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சென்றார். அவரை காண ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டனர்.
அப்போது செல்ஃபி எடுக்க வேண்டுமென அழுதபடி ஒரு சிறுமி குரல் எழுப்பினார். இதையறிந்த ஜெகன் மோகன் ரெட்டி சிறுமியை சமாதானப்படுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.