சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள இம்மனேந்தல் கண்மாய் மூலமாக 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த நிலையில், கண்மாய்க்கு நீர்வரத்து வரக்கூடிய இடத்தில், கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குவாரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி, மானாமதுரை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.