சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரத்தில் அசோக்குமார் – தவமணி தம்பதிக்கு வித்ய தாரணி, அருள் பிரகாஷ், அருள்குமாரி என்ற 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சென்றபோது அங்கு தவமணி மற்றும் மூன்று குழந்தைகள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதில், அருள் பிரகாஷ், வித்ய தாரணி ஆகிய 2 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் இருந்த தவமணி, அருள் குமாரி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயல் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது குழந்தைகளின் தந்தை அசோக்குமாரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது முதற்கட்ட விசாரணை தெரியவந்துள்ளது.