கோத்தகிரி அருகே காட்டு யானைகள் வழிமறித்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
செம்மனார் பழங்குடியின கிராமத்தில் உள்ள நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது வழியில் குட்டியுடன் காட்டு யானை கூட்டம் உலா வந்தது.
இதனால், நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர், ஓட்டுனர் அதிக ஒலி எழுப்பியதால் யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது.