வத்தலகுண்டு அருகே இரண்டு கட்டட தொழிலாளர்களை கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கொன்னம்பட்டியை சேர்ந்த அழகுமலை, மனோகரன் இருவரும் கட்டட வேலை செய்து வந்தனர்.
இவர்களுக்கும் நவீன் என்பவருக்கும் பல நாட்களாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இருவரையும்,
நவீன் கட்டையால் தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்தார்.
பின்னர் தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீனை கைது செய்தனர்.