சென்னை பள்ளிக்கரணை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேங்கை வாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரி நகரில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தாம்பரம் வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஜேசிபி இயந்திரம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.