திண்டுக்கல் மாவட்டம் புகையிலை பட்டியில் தேவாலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
நத்தம் அருகேயுள்ள புகையிலைபட்டியில் புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளது. இங்கு திருவிழா நடைபெறுவதை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 786 காளைகளும், 392 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்டுக்குட்டி, தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.